சமிந்த எரங்கவிற்கு அனுமதி!

Saturday, June 4th, 2016

இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில், இலங்கையின் பந்துவீச்சாளர் சமிந்த எரங்க விளையாட முடியும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவை இதனை சிறிலங்கா கிரிக்கட்டிடம் உறுதிப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது, முறையற்ற வகையில் பந்துகளை வீசி எறிந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் ஆறாம் திகதி அவர் லோபரோவில் உள்ள சோதனைக் கூடத்தில், பந்துவீச்சு சோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளார்.

எனினும் அவர் மீதான சோதனையின் அறிக்கை வெளியாகும் வரையில் அவர் தொடர்ந்து கிரிக்கட் போட்டிகளில் விளையாட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: