சமபோசா கிண்ணம் : பண்டத்தரிப்புப் பெண்கள் இறுதிக்குத் தகுதி!

சமபோசா கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
கொழும்பு சிற்றி லீக் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அரையிறுதியாட்டத்தில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணியை எதிர்த்து மொனராகல நல்லபுரவதி அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி வீராங்கனை கிரிசாந்தினியின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் மொனராகல நல்லபுரவதி அணியின் திணறினர். கிரிசாந்தி பதிவு செய்த இரண்டு கோல்களால் முதல் பாதியின் முடிவில் 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது பண்டத்தரிப்பு பெண்கள் அணி.
இரண்டாவது பாதியிலும் கிரிசாந்தி ஒரு கோலைப் பதிவு செய்தார். அவரை விட சயந்தினியும் கோலொன்றைப் பதிவுசெய்ய முடிவில் 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி.
இன்று நடைபெறவுள்ள இறுதியாட்டத்தில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை அணி குருநாகல் மலியதேவ அணியை எதிர் கொள்ளவுள்ளது.
Related posts:
|
|