சன்ரைசர்ஸ் அணி வெற்றி.!

Friday, April 13th, 2018

ஐ.பி.எல்.கிரிக்கட் தொடரின் 7 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதிய போட்டியில்மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்து துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 151 ஓட்டங்களைப்பெற்ற போட்டியில் வெற்றிப் பெற்றது.

இதற்கிடையில், இதுவரையில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளுக்கான புள்ளிகளின் அடிப்படையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 புள்ளிகளுடன் முதலாம் இடத்தில் உள்ளது.

சராசரி ஓட்டப்பெறுமதியின் அடிப்படையில் 2ம் இடத்தில் உள்ள சென்னை சுப்பர்கிங்ஸும் 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

கிங்ஸ் இலெவன் பஞ்சாப், கொல்கட்டா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் தலா 2 புள்ளிகளைப் பெற்று 3ம், நான்காம், ஐந்தாம் இடங்களில் உள்ளன.

மும்பை இந்தியன்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் மற்றும் டெல்லி டெயார் டெவில்ஸ் என்பன இன்னும் எந்த புள்ளிகளையும் பெறவில்லை.

Related posts: