சந்திமால் – திரிமான்னவுக்கு வாய்ப்பை வீணடித்து விட்டனர் – சனத் ஜயசூரிய!
Sunday, February 12th, 2017
தினேஸ் சந்திமால் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோருக்கு கூடுதலாக சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகவும் அதனை அவர்கள் வீணடித்துவிட்டதாகவும் இலங்கை அணியின் தேர்வுக்குழு தலைவரும் முன்னாள் அணித்தலைவருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியினருடன் தென்னாபிரிக்கா சென்றுள்ள சனத் ஜயசூரிய, அங்கு நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், உபுல் தரங்கவின் கிரிக்கட் வாழ்க்கையில் இரண்டாண்டு காலம் விரயமாகியுள்ளது.
உபுல் தரங்க சிறந்த முறையில் விளையாடி வருகின்றார். அத்துடன் அணி வீரர்களுடன் இணைந்து சிறப்பாக செயற்பட்டு வருகின்றார். மேலும், எதிர்காலத்தில் தரங்கவிடமிருந்து மேலும் திறமைகளை அவதானிக்க முடியும். தினேஸ் சந்திமால் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோருக்கு கூடுதலாக சந்தர்ப்பம் வழங்கப்பட்டது ஆனால் அவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளவில்லை என தெரிவித்தார்.
Related posts:
|
|