சண்டிலிப்பாய் இந்துவை வீழ்த்தி சம்பியன் அகியது வின்ஸ்ரார்!

Sunday, March 25th, 2018

அரியாலை 99 ஆவது சுதேச திருநாட் கொண்டாட்ட விழாவை முன்னிட்டு யாழ் மாவட்ட ரீதியிலான வலைப்பந்தாட்டப் போட்டியில் வின்ஸ்ரார் அணி சம்பியன் பட்டத்தை வென்றது யாழ். மாவட்ட ரீதியில் நடைபெற்ற இப் போட்டியில் அனைத்து போட்டிகளிலும் சிறந்த பெறுபேற்றைப் பெற்று அரை இறுதிக்கு முன்னேறிய வின்ஸ்ரார் அணி பரபரப்பான அரையிறுதியில் அராலி சரஸ்வதி விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது கடந்த சனிக்கிழமை அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மிகப் பலம் பொருந்திய அணியான சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது

கிண்ணம் வெல்லப் போகும் அணி எது எனும் ரசிகர்களின் பலத்தை எதிர்பார்ப்புடன் மோதிக் கொண்ட இவ் இரு அணிகளில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய வின்ஸ்ரார் அணி 23:30 எனும் புள்ளிகள் அடிப்படையில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியை வீழ்த்தி யாழ். மாவட்ட ரீதியிலான வலைப்பந்தாட்டச் சம்பியன் எனும் மகுடத்தை சூடிக் கொண்டது

Related posts: