சண்டிமாலுக்கு எலும்புமுறிவு!

இலங்கை அணி வீரர் சந்திமலுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவர் இனிவரும் இரண்டு போட்டிகளிலும் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை- இந்தியா இடையே நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியையும் இந்தியா வென்று, ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை இலங்கை வீரர் சண்டிமால் எதிர்கொண்டு ஆடினார்.அவர் 25 ஓட்டங்கள் எடுத்த போது பாண்ட்யா வீசிய ஷாட் பிட்ச் பந்து, அவரது பெருவிரலைப் பதம் பார்த்தது.இதில் வலியால் துடித்த சண்டிமாலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தொடர்ந்து விளையாடினார்.
36 ஓட்டங்களில் ஆட்டமிழந்த சண்டிமால் பின்னர் பீல்டிங் செய்ய வரவில்லை.மருத்துவர்கள் அவரது பெருவிரலில் சிறிதளவு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இதையடுத்து மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
|
|