சங்கா தலைமையில் எம்.சி.சி. பாகிஸ்தானுக்கு பயணம்!

மெர்ல்போன் கிரிக்கெட் கிளப் 46 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
குமார் சங்கக்கார தலைமையில் எம்.சி.சி. பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது விசேட அம்சமாகும்.
எம்.சி.சி. தலைமையில் ஓர் அணி பாகிஸ்தானுக்கு இதன்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அங்கு லாகூரில் இடம்பெறும் போட்டிகளில் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானின் கிரிக்கெடானது பெருமளவு வீழ்ச்சியடைந்திருந்த நிலையிலேயே சங்கக்கார தலைமையிலான எம்.சி.சி.யின் இந்த சுற்றுப் பயணமானது அந்நாட்டு கிரிக்கெட்டை மீண்டும் கட்டியெழுப்ப உந்து சக்தியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
Related posts:
தோல்வியை தவிர்க்க நியூசிலாந்து போராட்டம்!
ஒரு நாள் போட்டிகளில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் சாதனை!
வரலாற்று சாதனை படைத்த இலங்கை அணி!
|
|