சங்கக்காரா அதிரடி சதம்: அரையிறுதிக்கு முன்னேறிய சர்ரே அணி!

Saturday, August 20th, 2016

றொயல் லண்டன் கிண்ண தொடரில் சங்கக்காரா அதிரடி காட்ட சர்ரே அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்தில் றொயல் லண்டன் கிண்ண ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 3வது காலியிறுதிப் போட்டியில் சர்ரே- நார்தம்டன்ஷயர் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற நார்தம்டன்ஷயர் அணிக்கு ஜொஷ் காப் (66), ரோரி கெலின்வெல்ட் (76) அரைசதம் அடிக்க அந்த அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 276 ஓட்டங்கள் எடுத்தது.

சர்ரே அணி சார்பில், டர்ன்பட்ச் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் பிறகு 277 ஓட்டங்கள் எடுத்தால் வென்ற என களமிறங்கிய சர்ரே அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாற ஆரம்பித்தது. இருப்பினும் கடைசி வரை போராடிய சங்கக்காரா அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். கடைசி ஓவரில் சர்ரே அணி 9 விக்கெட்டுக்கு 265 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

12 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எந்த நிலையில் சங்கக்காரா அந்த ஓவரில் ஒரு சிக்சரும், கடைசி பந்தில் ஒரு பவுண்டரியும் விளாசி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இதனால் சர்ரே அணி 1 விக்கெட்டால் த்ரில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சங்கக்காரா 145 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சர் என 130 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Related posts: