சங்கக்காரவிற்கு சிறப்பு மரியாதை!

Wednesday, September 27th, 2017

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார சரே அணியில் பிரதிநிதித்துவப்படுத்தி தனது இறுதி முதற்தர போட்டியில் விளையாடினார்.

லென்கஷயர் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியின் முதல் இன்னிங்சில் 14 ஓட்டங்களை பெற்றிருந்த போது சங்கக்கார ஆட்டமிழந்தார்.இந்த போட்டித் தொடரைத் தொடர்ந்து முதற்தர போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ள சங்கக்கார , முதற்தர போட்டித் தொடர்களின் நான்கு நாள் கொண்ட போட்டிகளில் 8 சதங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.தனது இறுதி போட்டியில் விளையாடி 14 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சங்கக்கார மைதானத்தை விட்டு வெளியேறும் போது லென்கஷயர் வீரர்கள் சங்கக்காரவிற்கு சிறப்பு மரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: