சங்ககாரா, ஜெயவர்த்தனே ஒரே அணியில்: சூடுபிடிக்கிறது பாகிஸ்தான் சூப்பர் லீக்!

Thursday, October 20th, 2016

ஐபிஎல் கிரிக்கெட் போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டியை நடத்த தீர்மானித்தள்ளது

குறித்த பொட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் அடுத்த ஆண்டு பெப்ரவரி- மார்ச் மாதங்களில் நடைபெறும் போட்டியில், லாகூர், பெஷாவர், கராச்சி உள்ளிட்ட நகரங்களின் பெயரில் 5 அணிகள் களம் இறங்குகின்றன.பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் வீரர்களும் பங்கேற்கின்றனர்.

அணிகள்

  • பெஷாவர் ஜால்மி
  • லாகூர் கோலண்டர்ஸ்
  • கராச்சி கிங்ஸ்
  • இஸ்லாமாபாத் யுனைடெட்
  • குவாட்டா கிளாடியேட்டர்ஸ்
அடுத்த வருடம் நடக்க போகும் இந்த கிரிக்கெட் போட்டிகளின் சிறப்புகள் வருமாறு:
  • பெஷாவர் ஜால்மி அணியின் அணித்தலைவராக முதலில் நியமிக்கப்பட்ட அப்ரிடி, அதை தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த டேரன் சமிக்கு கொடுத்துள்ளார்.
  • லாகூர் கோலண்டர்ஸ் அணியில் சோஹில் தன்வீரும், கராச்சி கிங்ஸில் கிரிஸ் கெய்லும் இடம் பெற்றுள்ளனர்.
  • இஸ்லாமாபாத் அணியில் ஸ்மித் இடம் பெற்றுள்ளார், டீன் ஜோன்ஸ் இஸ்லாமாபாத் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிராட் ஹாடின் துணை பயிற்சியாளர் ஆவார்.
  • சூதாட்டத்தில் சிக்கிய வீரர்களான சல்மான் பட், முகமது ஆசிப் அந்த அணியினராலும் எடுக்கப்படவில்லை.
  • இலங்கை அணி வீரர்களான மஹேல ஜெயவர்த்தனே மற்றும் குமார் சங்ககாரா கராச்சி கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

psl1-720x480

Related posts: