சங்ககாரவின் இரசிகையான கனவு கன்னி!

Monday, August 7th, 2017

இங்கிலாந்தில் நடைபெற்றுமுடிந்த மகளிர் உலக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஜொலித்ததன் மூலம் உலக இளைஞர்களின் மனதைக் கொள்ளைக்கொண்ட இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககாரவின் இரசிகை என கூறியிருப்பது சங்ககாவை நெகிழ வைத்துள்ளது.

தனது அழகாலும் துடுப்பாட்ட திறனாலும் பல கோடி இரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த ஸ்மிரிதி மந்தனா, சங்ககாரவின் விருப்பத்துக்குரிய சொட்டான கவர் ட்ரைவ் சொட் தனக்குள் ஒரு தெளிவு மற்றும் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அவரிடம் இருந்து தன்னை மேம்படுத்தி கொள்வதாகவும் அண்மையில் கூறியிருந்தார்.

இதனையறிந்த சங்ககாரா, ஸ்மிரிதி போன்ற மிக திறமை வாய்ந்த ஒரு இளம் வீராங்கனை என்னை பற்றி பேசியது எனக்கு பெருமையே. அவரை போன்ற ஒருவர் என்னை முன்னுதாரமாக எடுத்து விளையாடி வருவது என்னை மேலும் பாக்யம் செய்தவராக மாற்றும் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

Related posts: