கோஹ்லி டக்அவுட் : சுருண்டது இந்தியா!

Saturday, February 25th, 2017

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 105 ஓட்டங்களில் சுருண்டது.

நேற்று புனேயில் தொடங்கிய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல்நாள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 256 ஓட்டங்கள் எடுத்தது.

இன்று இரண்டாவது நாள் தொடர்ந்து விளையாடி அவுஸ்திரேலிய முதல் இன்னிங்சில் 260 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து முதல் இன்னங்சில் களமிறங்கி விளையாடி இந்திய அணி அவுஸ்திரேலிய பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 105 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய தரப்பில் கே.எல். ராகுல் 64 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணித்தலைவர் கோஹ்லி டக் ஆவுட் ஆனார். அவுஸ்திரேலிய அணிதரப்பில் ஸ்டீவ் ஓகீபே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

தற்போது 155 ஓட்டங்கள் முன்னிலையுடன் அவுஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

Cricket2_Liveday-696x392

Related posts: