கோஹ்லி ஆக்ரோசம்: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பெங்களூர்

Thursday, May 19th, 2016

கோஹ்லி அதிரடி ஆட்டத்தால் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 82 ஒட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பிளே ஓப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

ஐ.பி.எல். லீக் தொடரின் 50வது லீக் போட்டி நேற்று பெங்களூரில் நடந்தது. பெங்களூரில் மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. நேரம் அதிகமானதால் ஆட்டம் 15 ஓவராக குறைக்கப்பட்டது.

நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 15 ஒவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்கள் குவித்தது.

பெங்களூர் அணியில் அதிகபட்சமாக அணித்தலைவர் விராட் கோஹ்லி 50 பந்துகளில் 113 ஓட்டங்கள் குவித்தார், கெய்ல் 32 பந்துகளில் 73 ஓட்டங்கள் குவித்தார்.

15 ஒவர்களில் 212 ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 14 ஒவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 120 ஒட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்தது. இந்நிலையில், டக்வொர்த்-லீவிஸ் முறை படி றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 82 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.

Related posts: