கோஹ்லியை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை -கும்ப்ளே

Monday, June 26th, 2017

கோஹ்லியைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளரான கும்ப்ளே கூறியுள்ளார்.

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்று பயணத்தில் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் இல்லாமல் விளையாடி வருகிறது.

இருந்த போதிலுல் இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி, கும்ப்ளே மீதும், கும்ப்ளே, விராட் கோஹ்லி மீதும் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்நிலையில் கும்ப்ளே, நான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தேனோ அவை அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன், இனி கோஹ்லியைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.

Related posts: