கோஹ்லியை சீண்டிய கம்பீர்!

ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் போட்டியின் போது கொல்கத்தா அணித்தலைவர் கம்பீர், பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லியை சீண்டியதால் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
இந்திய அணியின் சீனியர் வீரரான கவுதம் கம்பீர் எதிரணி வீரர்கள், சொந்த வீரர்கள் என ஏதும் பார்க்காமல் வம்பிழுப்பதை வாடிக்கையாக கொண்டவர்.
இவர் தற்போது இந்திய அணியில் இடம்பெறவில்லை. இவர் கடந்த 2013ம் ஆண்டு 6வது ஐபிஎல் சீசனில் கோஹ்லியுடன் சண்டையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் கோஹ்லி ஓட்டங்கள் எடுக்க ஓடி கீரிஸை தாண்டிய பிறகும் கம்பீர் கோஹ்லியை குறிவைத்து பந்தை எறிந்தார். இதனால் அனைவரும் அதிருப்தி அடைந்தனர்.
இதன் பிறகு கம்பீரிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்ட நடுவர்கள் அவரை எச்சரித்தனர்.
விராட் கோஹ்லி 32 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அவர் கொடுத்த கேட்சை கவுதம் கம்பீர் தவறவிட்டார். இதனாலே கொல்கத்தா அணி தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|