கோஹ்லியை கிண்டல் செய்தது தவறு -கிளார்க்!

Thursday, March 23rd, 2017

அவுஸ்திரேலிய வீரர்களின் சரியில்லாத செயல்பாடுகளை ஊடகங்கள் மறைப்பதாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கல்கிளார்க் தெரிவித்துள்ளார்.

இந்திய-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இரு அணி வீரர்களும் ஆக்ரோசமாக விளையாடி வருகின்றனர்.

இத்தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. அதை அவுஸ்திரேலிய வீரர்கள் கிண்டல் அடித்தனர். அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய ஊடகங்கள் சில கோஹ்லியை டிரம்புடன் ஒப்பிட்டு சில கருத்துக்களை வெளியிட்டது.

இந்நிலையில் இது குறித்து அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் கூறுகையில், கோஹ்லிக்கு தோள் பட்டையில் ஏற்பட்ட காயம் குறித்து அவுஸ்திரேலிய அணி வீரர்கள் கிண்டலடித்தது தவறு என்றும், அவுஸ்திரேலிய வீரர்களின் சரியில்லாத செயல்பாடுகளை மறைப்பதற்காக சில அவுஸ்திரேலிய ஊடகங்கள் முயல்வதாகவும் கிளார்க் குற்றம் சாட்டியுள்ளார்.

Related posts: