கோஹ்லிக்கு ஏற்பட்ட சோகம்!

Saturday, June 10th, 2017

இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி மூன்று ஆண்டுகளுக்க பின்னர் டக் அவுட் ஆகி இந்திய ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளார்.

இந்தியா, இலங்கை இடையிலான சாம்பியன்ஸ் கிண்ண போட்டி இலண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்றது.இந்தியா முதலில்.துடுப்பெடுத்தாடியது. அப்போது கோஹ்லி ஓட்டங்கள் எதுவும் பெறாமல் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் கோஹ்லி ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

5 பந்துகளை மட்டுமே சந்தித்த கோஹ்லி நுவன் பிரதீப்பின் பந்து வீச்சில், விக்கட் காப்பாளர் திக்வெல்லவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.குறித்த போட்டிக்கு முன் , கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி இங்கிலாந்திற்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது

Related posts: