கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 09 விக்கட்டுக்களால் வெற்றி..!

Friday, December 11th, 2020

லங்கா பிரிமியர் லீக் தொடரில் கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 9 விக்கட்டுக்களால் வெற்றிபெற்று அரையிறுதிக்கான வாய்ப்பினை பெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கோல் கிளேடியேட்டர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய கண்டி டஸ்கர்ஸ் 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில் 127 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 17 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து 130 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி சார்பில் 66 பந்துகளில் 94 பெற்றுக்கொடுத்த தனுஷ்க குணத்திலக்க ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொண்டார்.

இந்த ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடரில் ஜப்னா ஸ்டேலியன்ஸ், கொழும்புகிங்ஸ், தம்புள்ள வைக்கிங் மற்றும் கொல் கிளேடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதி வாய்பினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: