கோலுன்றிப் பாய்தலில் மகாஜனாவுக்கு வெள்ளி !

பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்டத் தடகள தொடரில் நேற்று நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவு கோலுன்றிப் பாய்தலில் மகாஜனக் கல்லூரிக்கு வெள்ளிப்பதக்கமும் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்துள்ளது.
கண்டி – போகம்பரை விளையாட்டு மைதானத்தில் பாடசாலைகளுக்கு இடையிலான தேசியத் தடகளம் நேற்று ஆரம்பமானது. 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு கோலுன்றிப் பாய்தலில் வடமாகாணம் சார்பாக களமிறங்கிய தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வீராங்கனை சிறிகந்தராசா டிலானி 2.80 மீற்றர் உயரத்திற்கு பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த பா.கிரிஜா 2.70 மீற்றர் உயரத்திற்கு பாய்ந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
Related posts:
பதக்கப்பட்டியலில் சீனாவை பின்தள்ளிய பிரித்தானியா!
இங்கிலாந்து அணியை எச்சரித்த பீட்டர்சன்!
U19 உலகக்கிண்ண மோதல் : 5 வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை !
|
|