கோலி விளையாடமாட்டார்!

Tuesday, October 22nd, 2019

இந்திய அணி தலைவர் விராட் கோலி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஓய்வு இல்லாமல் விளையாடி வருகிறார். அவுஸ்திரேலியா தொடர், ஐபிஎல், உலகக் கிண்ண, மேற்கிந்திய தீவுகள், தற்போது நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்கா தொடர் என ஓய்வில்லாமல் விளையாடி வருகிறார்.

இதனால் வேலைப்பளுவை காரணம் காட்டி பங்களாதேஷிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விராட் கோலி விளையாடமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷ் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு வருகின்ற 24 ஆம் திகதி நடக்கிறது. அப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

Related posts: