கோலியே இலக்கு – புவனேஸ்வரகுமார்

Sunday, May 29th, 2016

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் விராட் கோலியின் விக்கட்டினை வீழ்த்த திட்டமொன்றை அணியினர் செயற்படுத்தவுள்ளதாக  சன்ரைஸைஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த வருட ஐ.பி.ல் போட்டியில் அதிக விக்கட்டுகளை கைப்பற்றிய வரிசையில் புவனேஸ்வர்குமார் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

இறுதிப்போட்டியில் விராட் கோலியை வீழ்த்துவது தொடர்பில் கேள்வியொன்றை கேட்டபோதே இவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் விராட் கோலி சன்ரைஸஸ் அணியுடனான  போட்டிகளில்  முதல் போட்டியில் 14 ஓட்டங்களையும் மற்றுமொரு போட்டியில் 75 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்திருந்தார்.

இதில் ஒரு போட்டியில் புவனேஸ்வரகுமார் விராட் கோலியின் விக்கட்டினை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருட ஐ.பி.எல் போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் பட்டியலில் விராட்கோலி முதலிடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே இறுதிப்போட்டியில் இவர்கள் இருவருக்கிடையிலான போட்டி நிச்சயமாக சூடுபிடிக்கும்

Related posts: