கோர விபத்தில் சிக்கிய இந்திய அணியின் முன்னாள் வீரர்!

Saturday, January 12th, 2019

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜேகப் மார்டின் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் இந்திய அணிக்காக 10 ஒருநாள் போட்டிகளிலும், 138 முதல்தர போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

ரஞ்சி தொடரில் பரோடா அணிக்காக ஆடியுள்ளார். பரோடா அணியின் தலைவராகவும்  இருந்துள்ளார்.

இவரது தலைமை கீழ்தான் யூசுப் பதான் பரோடா அணியில் அறிமுகமானார். ஜேகப் மார்டின், கடந்த புதன்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள யூசுப் பதான், அவர் விரைவில் குணமடைய வேண்டியுள்ளார்.