கோப்பை யாருக்கும் விட்டு தரமாட்டோம் – அதிரடி வீரர்

Thursday, November 15th, 2018

தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான 360 டிகிரி டிவில்லியர்ஸ் ஐபிஎல் தொடரை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.

இது குறித்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், அனைத்து டி20 போட்டிகளை விட ஐபிஎல் உலகில் மிகப்பெரிய டி20 போட்டி ஆகும்.

விராட் கோஹ்லி மற்றும் என் அணியான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருவின் சக வீரர்களுடன் மீண்டும் இணைய என்னால் நீண்ட நாள் காத்திருக்க முடியாது.

விரைவில் இணைய ஆவலாக இருக்கிறேன். இம்முறை 2018 தொடரின் ஏமாற்றங்களையெல்லாம் நாங்கள் அணியாகத் திரண்டு துடைத்தெறிவோம்.

ஆர்சிபி அணி ஐபிஎல் தொடரை வெல்லக் கூடிய ஆற்றல் உள்ளதுதான், ஆனால் இதுவரை ஏன் வெல்ல முடியவில்லை என்பது ஒருவருக்கும் தெரியாத புதிராக உள்ளது. இம்முறை 2019-ல் நாங்கள் ஒரு அணியாக மிகவும் சவாலாக இருப்போம்.

இந்தியாவில் தேர்தல் நேரம் என்பதால், அப்போது இந்தியாவில் தொடர் நடக்குமா என்பது தெரியவில்லை. இந்தியாவில் ஐபிஎல் நடைபெறுவதுதான் சிறந்தது.

காரணம் அந்த ரசிகர்கள் அபாரம், அவர்களை கேளிக்கைப்படுத்துவதுதான் முக்கியம். ஆனாலும் இதைவிடவும் முக்கிய காரணங்கள் இருந்தாலும் சரியான முடிவு எட்டப்படும் என்றே நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Related posts: