கோப்பையை கைப்பற்றிய லிவர்பூல்!

Sunday, June 2nd, 2019

சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற லிவர்பூல் அணி, 14 வருடங்களுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றியுள்ளது.

UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரானது ஸ்பெயின் நாட்டில் நடந்து வந்தது. இதன் இறுதி போட்டியில் இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து அணியில் விளையாடும் லிவர் பூல் அணியும், டோட்டன்ஹாம் அணியும் மோதின.

கடந்த ஆண்டு இறுதி போட்டியில் தோல்வியடைந்த லிவர்பூல் அணி இந்த ஆண்டு நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் இறுதி போட்டியில் இரு அணிகளுமே சிறப்பாக விளையாடியதால், போட்டியும் விறுவிறுப்பாக இருந்தது. போட்டி ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்தில் லிவர்பூல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட முகம்மது சாலா அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார்.

அந்த சமயத்தில் மொடல் அழகி ஒருவர் திடீரென நீச்சல் உடையில் மைதானத்திற்குள் வலம்வந்ததால், ஆட்டம் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.

பின்னர் மீண்டும் துவங்கிய ஆட்டத்தில் இரண்டாவது கோல் அடித்து Divock Origi அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதன்மூலம் 2005ம் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக லிவர்பூல் அணி கோப்பையை கைப்பற்றியது.

Related posts: