கோபிசந்த் சிறந்த பயிற்சியாளர்: சிந்து பதிலடி!

Thursday, August 25th, 2016

கோபிசந்த் சிறந்த பயிற்சியாளர் என்று ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கருத்து தெரிவித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவின் பயிற்சியாளர் கோபிச்சந்தை மாற்றுவோம் என தெலுங்கானா துணை முதலமைச்சர் மெஹ்மூத் அலி தெரிவித்து இருந்தார். பயிற்சியின் போது வீரர்களுக்கு அளிக்கப்படும் உணவில் அசைவத்தின் முக்கியத்துவம் குறித்து கோபிசந்த் கூறிய கருத்தினால் தான் இந்த முடிவு எடுக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது.

இறைச்சியை தவிர்க்கச் சொல்லும் இந்திய உணவுப் பழக்கம் விளையாட்டு வீரர்களுக்கு உகந்தது அல்ல என்று கோபிசந்த் கூறி இருந்தார்.பயிற்சியாளர் கோபிசந்தை மாற்றும் முடிவிற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், கோபிசந்த் சிறந்த பயிற்சியாளர் என்று பி.வி.சிந்து கருத்து தெரிவித்துள்ளார். மேலும், கரோலினா மரின் மிகவும் சிறப்பாக விளையாடியதாகவும், அன்றைய தினம் அவருக்கானது என்று கூறினார்.

Related posts: