கோபா கால்ப்பந்து – சாம்பியன் பட்டம் வென்றது பிரேசில்!

Tuesday, July 9th, 2019

பிரேசில் நாட்டில் நடைபெற்று வந்த கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பெருவை 3-1 என வீழ்த்தி பிரேசில் சாம்பியன் பட்டம் வென்றது.

கால்பந்து விளையாடும் தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளுக்கிடையே கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் பிரேசில் – பெரு அணிகள் மோதின.

பிரேசில் முதல் பாதி நேரத்தில் 2-1 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் கோல் அடிக்கும் வாய்ப்பு இரு அணிகளுக்கும் கிடைக்கவில்லை.

ஆட்டத்தின் கடைசி நிமிடமான 90-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பெனால்டியை பயன்படுத்தி ரிச்சார்லிசன் கோல் அடிக்க பிரேசில் 3-1 என வெற்றி பெற்றது.

Related posts: