கோடைக்கால ஒலிம்பிக் தொடர்பில் ஜப்பான் பிரதமர்!

Friday, February 7th, 2020

ஜப்பானில் நடப்பு ஆண்டு நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், கோடைகால பரா ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமென ஜப்பான் தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக, ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது சந்தேகம் என சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் இச்செய்தி உண்மைக்கு புறம்பானது என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஒலிம்பிக் போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவது குறித்து சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் போன்ற அமைப்புக்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts: