கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி
Friday, October 30th, 2020ஐ.பி.எல். போட்டியில் நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.
13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 49 ஆவது லீக் போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்றது.
துபாயில் நேற்று ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களை குவித்தது.
அணி சார்பில் நிட்டிஷ் ரானா 61 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கலாக 87 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார்.
173 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்களை குவித்து வெற்றியிலக்கை கடந்தது.
இறுதிப் பந்தில் ஒரு ஓட்டம் தேவை என்ற நிலையிருந்தபோது ஜடேஜா சிக்ஸரை விளாசித் தள்ளினார்.
சென்னை அணி சார்பில் அதிகபடியாக ருதுராஜ் கெய்க்வாட் 53 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக 72 ஓட்டங்களை குவித்தார்.
இந்த தோல்வியின் மூலம் கொல்கத்தா அணியின் பிளே-ஒப் சுற்றுக்கான வாய்ப்பு மழுங்கடிக்கப்பட்டுள்ளது
Related posts:
|
|