கொரோனா வைரஸ் – கால்பந்து பயிற்சியாளர் பலி!

Wednesday, March 18th, 2020

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின் நாடுகளில் அதிக அளவில் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்தநிலையில் கொரோனா வைரஸூக்கு ஸ்பெயினை சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் பலியாகி உள்ளார்.

ஸ்பெயினை சேர்ந்த 21 வயதான பிரான்சிஸ்கோ கார்சியா அங்குள்ள அட்லெடிகோ போர்டா அல்டா கிளப்பில் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கொவிட் 19 எனும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் கொரோனா வைரஸூக்கு பலியானார்.

இந்த வைரஸூக்கு பலியான இளம் வயதானவர் கார்சியா ஆவார். அவரது மறைவுக்கு அட்லெடிகோ போர்டா அல்டா கிளப்பு இரங்கல் தெரிவித்துள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று அந்த கிளப் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளது.

ஸ்பெயினில் உள்ள மற்றொரு கால்பந்து கிளப்பான வாலன்சியாவை சேர்ந்த கேரி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

Related posts: