கொத்மலே கிண்ணத்தை வென்றது கொழும்பு ஸாஹிரா!

Wednesday, November 9th, 2016

இலங்கையில் இடம்பெறும் முக்கிய கால்பந்து போட்டிகளில் ஒன்றான பாடசாலை கால்பந்து அணிகளுக்கு இடையிலான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கொத்மலே கிண்ணத்தின் இவ்வருட சம்பியனாக கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணி தெரிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் துறையப்பா மைதானத்தில் இடம்பெற்ற யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி அணியுடனான மாபெரும் இறுதிப் போட்டியில் 3-–0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டதன் மூலமே இந்த சம்பியன் பட்டத்தை அவ்வணி பெற்றுள்ளது.

ஸாஹிரா அணி நடப்புச் சம்பியன் யாழ் புனித ஹென்ரியரசர் கல்லூரி அணியை அரையிறுதியில் பெனால்டி முறையில் வென்றது.

அதேபோன்று, மற்றைய அரையிறுதியில் வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரி அணியை பெனால்டி முறையில் வெற்றி கொண்ட புனித பத்திரிசியார் கல்லூரி அணி கிண்ணத்திற்கான இன்றைய இறுதிப் போட்டியில் மோதின. போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸாஹிரா கல்லூரி அணி சார்பாக அவ்வணியின் சப்ரான் சதார் முதல் கோலைப் போட்டு அணியை முன்னிலைப் படுத்தினார். எனினும் முதல் பாதியில் போடப்பட்ட ஒரே கோலாக அது இருந்தது.

பின்னர் முன்னிலையில் இருக்கும் ஒரு தெம்புடன் ஆடிய ஸாஹிரா கல்லூரி அணி சார்பாக 51ஆவது நிமிடத்தில் மொஹமட் ஷஹீலும், 81ஆவது நிமிடத்தில் மொஹம்மட் ஹம்மதும் தலா ஒரு கோலைப் பெற்றுக் கொடுக்க ஸாஹிரா அணி போட்டியை முழுமையாக தம்வசப்படுத்தியது.

மறு முனையில் புனித பத்திரிசியார் கல்லூரி அணி பல முயற்சிகளை மேற்கொண்டும் அவர்களால் ஸாஹிரா கல்லூரி அணியின் பின்கள வீரர்களைத் தாண்டி பந்தைக் கொண்டு செல்வது பாரிய சிரமமாகவே இருந்தது.போட்டி நிறைவடையும் நேரம் வரை அவர்களால் எந்த ஒரு கோலும் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

colzahira-kotmale-696x464161148529_4991066_07112016_aff_cmy

Related posts: