கொடுக்கப்பட்டது அதிகபட்ச தண்டனை: ஷேன் வாட்சன்!

Thursday, May 31st, 2018

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர், பான்கிராஃப்ட் மற்றும் ஸ்மித்திற்கு கொடுக்கப்பட்டது அதிகபட்ச தண்டனை என அவுஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

2018 ஐ.பி.எல் டி20 தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல் கிண்ணத்தை வென்றது. சென்னை அணியின் வெற்றிக்கு ஷேன் வாட்சனின் அதிரடி சதம் முக்கியமான காரணமாக அமைந்தது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட தடை குறித்து ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஷேன் வாட்சன் கூறுகையில், ‘தடையை ஒப்பிடும்போது அவர்கள் மீதான தண்டனை மிகவும் அதிகபட்சமானது. கடந்த காலங்களில் இதுபோன்று நடைபெற்ற தவறுகளுக்கு இப்படி தண்டனை கொடுக்கப்படவில்லை.

மூன்று பேரும் அதிகப்படியான விலையை கொடுத்துள்ளனர். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மீண்டும் அணிக்கு திரும்பும்போது, மக்களின் நல்ல பெயர் எடுக்க எல்லா வகை முயற்சிகளையும் மேற்கொள்வார்கள்’ என தெரிவித்துள்ளார்.

Related posts: