கே.சி.சி.சி கிரிக்கெட் தொடர் கிறாஸ் கொப்பர் வெற்றி !

Tuesday, April 3rd, 2018

கொக்குவில் சனசமூக நிலையம் தமது 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான கிரிகெட் போட்டியில் கிறாஸ்கொப்பர் அணி வெற்றி பெற்றுள்ளது .

நேற்று முன் தினம் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கிறாஸ்கொப்பர் அணியை எதிர்த்து ரெயின்போ அணி மோதியது முதலில் துடுப்பெடுத்தாடிய கிராஸ்கொப்பர் அணியை எதிர்த்து ரெயின்போ அணி மோதியது முதலில் துடுப்பெடுத்தாடிய கிறாஸ்கொப்பர் அணி 30 ஓவர் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 342 ஓட்டங்களை பெற்றனர் .அவ்வணி சார்பில் டினோஜன் 131,அஜித் 59,பிரகலாதன் 24 ஓட்டங்களைப் பெற்றனர்.பந்து வீச்சில் ரெஜின்போ அணி சார்பில் காந்தன் 4,லக்சன் 2, அருண்,ரஜீவன் ஆகியோர் ஒவ்வொரு விக்கட்டுக்களையும் கைப்பற்றினர் .

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரெயின்போ அணி 25.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 195 ஓட்டங்களை பெற்றனர் அவ்வணி சார்பில் செந்தூhரன் ஆட்டம் இழக்காமல் 83, சௌமிகன் 43,திரோசன் 32 ஓட்டங்களையும் பெற்றனர் பந்து வீச்சில் கிறாஸ் கொப்பர் அணி சார்பில் தாருசன், தரண்ராஜ் ஆகியோர் 2 விக்கட்டுக்களையும் மதுசன் ,அஜித், டினோஜன்  ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்

 

Related posts: