கேள்விக்குறியாகும் சம்பியன்ஸ் கிண்ணம்!

Saturday, June 25th, 2016

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத்தின் எதிர்காலம், மீண்டும் சந்தேகத்துக்குரியதொன்றாக மாறியுள்ளது. அதாவது, 2021ஆம் ஆண்டு இந்தியாவில் இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத்தோடு இத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, 2019ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டி லீக் அறிமுகப்படுத்தப்பட்டால், அடுத்த வருடம் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள தொடரோடு, சம்பியன்ஸ் கிண்ணம் நிறைவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

2013ஆம் ஆண்டோடு சம்பியன்ஸ் கிண்ணத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக இருந்தபோதும், அத்தொடருக்கு கிடைத்த பாரிய வர்த்தக வெற்றி காரணமாக சம்பியன்ஸ் கிண்ணம் தொடர்ந்திருந்தது.

Related posts: