கெவின் பீற்றர்சன் மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில்?

Friday, July 21st, 2017

தென்னாப்பிரிக்க கிரிக்கட் அணியின் ஊடாக சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் மீண்டும் விளையாடும் எண்ணம் தமக்கு இன்னும் இருப்பதாக இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீற்றர்சன் தெரிவித்துள்ளார்.

2013-2014 ஆசஸ் தொடர் தோல்வியை அடுத்து, கெவின் பீற்றர்சன் இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டார்பின்னர் அவர் அணியில் இடம்பெற முயற்சிகள் எடுத்தப் போதும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை

தற்போது 37 வயதான பீற்றர்சன், தாம் பிறந்தநாடான தென்னாப்பிரிக்காவின் ஊடாக மீண்டும் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாட எண்ணம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவர் மீண்டும் இதற்கு தகுதி பெறுவதற்கு 3 ஆண்டுகள் தேவை என்ற நிலையில், அப்போது அவருக்கு 40 வயதாக இருக்கும்.

எனவே அவருக்கு தென்னாப்பிரிக்க அணியில் இடம்கிடைக்குமா? என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

Related posts: