கெய்லின் சாதனையை சமன் செய்த அலெக்ஸ் ஹேல்ஸ்!

Monday, August 7th, 2017

நட்வெஸ்ட் இருபதுக்கு – 20 போட்டியொன்றில், அலெக்ஸ் ஹேல்ஸ் 30 பந்துகளில் 95 ஓட்டங்களைக் குவித்திருந்தார். இதனால் இருபதுக்கு – 20 போட்டிகளில் அதிவேகமாக சதம் பெற்ற கிறிஸ் கெய்லின் சாதனையை அவர் சமன் செய்தள்ளார்.

நொட்டிங்ஹம்ஷையர் மைதானத்தில், நேற்று இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டேர்ஹாம், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், மைக்கல் றிச்சர்ட்ஸன் 53 (41), போல் கெளலின் 42 (25), கமரொன் ஸ்டீல் 35 (23), றயான் பிறிங்கிள் 25 (12) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சமித் பட்டேல், இஷ் சோது, ஸ்டீவன் முலன்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 184 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நொட்டிங்ஹம்ஷையர்,  13.5 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், அலெக்ஸ் ஹேல்ஸ் 95 (30), றிக்கி வெஸல்ஸ் 41 (34), சமித் பட்டேல் 26 (16) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜேம்ஸ் வெய்ஹல், கமரோன் ஸ்டீல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

Related posts: