குழந்தையை பெற்றெடுத்தார் செரீனா!

Sunday, September 3rd, 2017

டென்னீஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவரின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

உலக புகழ்பெற்ற டென்னீஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், ரெட்டிட் இணையதள நிறுவனத்தின் இணை நிறுவனராக இருக்கும் அலெக்சிஸ் ஒஹனியனை காதலித்து வந்தார்.

இந்நிலையில், கர்ப்பமடைந்த செரீனாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை செரீனாவின் பயிற்சியாளர் பேட்ரிக் மௌராடோக்லோவ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.பேட்ரிக்கின் பதிவில், பெண் குழந்தை பிறந்ததற்கு வாழ்த்துக்கள் செரீனா. எனக்கு இது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.செரீனாவின் சகோதரி வீனஸ் கூறுகையில், நிச்சயமாக நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன். வார்த்தைகளால் அதனை விளக்க முடியவில்லை என கூறியுள்ளார்.டென்னீஸ் பிரபலங்கள் மட்டுமில்லாது பல்வேறு பிரபலங்களும் செரீனாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Related posts: