குளிர்கால ஒலிம்பிக்ஸ் : ஜேர்மனி முன்னிலை !

Saturday, February 17th, 2018

தென்கொரியாவில் இடம்பெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் பதக்க பட்டியலில் ஜேர்மன் தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது.

9 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட மொத்தம் 15 பதக்கங்களுடன் ஜேர்மன் முதலிடத்தில் உள்ளது.

அதனை தொடர்ந்து 6 தங்கம், 7 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட மொத்தம் 17 பதக்கங்களுடன் நோர்வே 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

3வது இடத்திற்கு நெதர்லாந்து, 5 தங்கம் 5 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் உட்பட மொத்தம் 12 பதக்கங்களுடன் 2வது இடத்தில் இருந்து பின்லையடைந்தது.

அதனை தொடந்து ஐக்கிய அமெரிக்க 5 தங்கம் உட்பட மொத்தம் 8 பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது. 5 வது இடத்தில் 4 தங்கம் உட்பட மொத்தமாக 13 பதக்கங்களுடன் கனடா உள்ளது

போட்டியை நடத்து நடத்தும் நாடான தென்கொரிய ஒரு தங்கம் ஒரு வெண்கலம் உட்பட 2 பதக்கங்களுடன் தொடர்ந்தம் 10வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: