குளிர்கால ஒலிம்பிக்ஸ்  – அமெரிக்கா அபார வெற்றி !

Wednesday, February 21st, 2018

தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பதக்கம் பெற்ற நாடுகளில் நோவே முன்னணியில் உள்ளது.

நோவே 9 தங்கம் 9 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்ளை பெற்று மொத்தமாக 26 பதக்கங்களை பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள ஜேர்மனி 9 தங்கம் 5 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்களை பெற்று மொத்தமாக 18 பதக்கங்களை பெற்றுள்ளது.மூன்றாவது நிலையில், நெதர்லாந்து 6 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை பெற்று மொத்தமாக 13 பதக்கங்களை பெற்றுள்ளது.

இது தவிர, நான்காவதாக கனடா மொத்தமாக 16 பதக்கங்களையும், அமெரிக்கா 10 பதக்கங்களை பெற்று ஐந்தாவது இடத்திலும் உள்ளது.அதேவேளை, அமெரிக்க ஐஸ் ஹொக்கி அணிக்கும் பின்லாந்து அணிக்கும் இடையே இடம்பெற்ற போட்டியில் அமெரிக்கா ஐந்திற்கு பூஷ்யம் என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் அமெரிக்காவிற்கு தங்கம் கிடைத்துள்ளது.மகளீர் விளையாட்டுப் போட்டிகளில் அமெரிக்க அணி 20 வருடங்களுக்குப் பின்னர் இந்த வெற்றியை பெற்றுள்ளது. 1998 ஆம் ஆண்டு நாகனோவில் இடம்பெற்ற குளிர்கால ஒலிம்பிக்ஸ் இற்குப் பின்னர் தற்போது தங்கத்தை சுவீகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: