குலசேகராவை ஒப்பந்தம் செய்த இங்கிலாந்து கழகம்!

Friday, July 1st, 2016

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான குலசேகராவை இங்கிலாந்தின் சசெக்ஸ் கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இங்கிலாந்தில் கழக அணிகளுக்கு இடையில்நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட்கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் பங்கேற்கும் சசெக்ஸ் அணி வங்கதேசத்தின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முஸ்டாபிஜூர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது.

ஆனால், ஐபிஎல் தொடரின் போது தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்த முஸ்டாபிஜூர் இங்கிலாந்து செல்ல தாமதமானது. இதனால் இலங்கை அணியின் குலசேகராவை சசெக்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

தற்போது கெண்ட் அணிக்கு எதிராக ஆடி வரும் குலசேகரா, மிடில்செக்ஸ் மற்றும் கிளேமோர்கன் அணிகளுக்கெதிராகவும் விளையாட இருக்கிறார். முஸ்டாபிஜூர் ரஹ்மான் இந்த தொடரின் கடைசி 4 போட்டிகளிலும், றொயல் லண்டன் ஒருநாள் தொடரின் 4 போட்டிகளிலும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: