குமார் சங்கக்கார இணக்கம்!

Saturday, March 3rd, 2018

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கட் போட்டிகளின் இறுதிச் சுற்று போட்டிகளில் பங்கு கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். .

இந்த முறை பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டியில் குமார் சங்கக்கார முல்தன் சுல்தான் அணியில் விளையாடுகிறார். இதுவரை குமார் சங்கக்கார விளையாடும் அணி 3 போட்டிகளில் பங்கு கொண்டு 2இல் வெற்றி பெற்றுள்ளதுடன், புள்ளிகள் பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ளது.

குமார் சங்கக்கார உள்ளிட்ட பல வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் செல்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக, பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் மீது 2009ஆம் ஆண்டு லாஹூரில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்து குமார் சங்கக்கார பாகிஸ்தான் செல்லும் முதல் சந்தர்ப்பமாக இதுஅமைகிறது. பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளின் மூன்று இறுதிச்சுற்று போட்டிகள் லாஹூர் மற்றும் கராய்சியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: