குமார் சங்கக்காராவின் சகோதரியை வாழ்த்திய விராட் கோஹ்லி!

Monday, May 28th, 2018

பிரபல கிறிக்கெற் வீரர்  சங்கக்காராவின் சகோதரி புதிதாக தொடங்கியுள்ள ஆடைகள் தொடர்பான வலைதளம் குறித்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளார்.

சங்கக்காரா தனது டுவிட்டர் பக்கத்தில், எனது சகோதரி சாரங்க சங்கக்காரா, குழந்தைகளின் பிரேத்யேக ஆடை தொடர்பான புதிய வலைதளம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

அதனைப்பார்த்து விட்டு, அதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உங்கள் கருத்தை தெரிவியுங்கள் என கோஹ்லியுடம் கேட்டுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் வலைதளத்தின் லிங்கையும் அதில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள கோஹ்லி, கடையில் உள்ள அனைத்தையும் பார்வையிட்டேன், மிகவும் சிறப்பாக இருக்கிறது. இந்த தொழில் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Related posts: