குடும்பத்திற்காக கார் பந்தயங்களிலிருந்து ஓய்வு பெறும் நிகோ ரோஸ்பெர்க்!

Saturday, December 3rd, 2016

தனது குடும்பத்துக்காக ஃபார்முலா முதற்தர கார் பந்தயத்திலிருந்து தான் ஓய்வு பெறப்போவதாக ஜெர்மன் கார் பந்தய வீரரான நிகோ ரோஸ்பெர்க் அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மெர்ஸிடீஸ் அணிக்கு எதிரான தன்னுடைய முதல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிப்பெற்று சில தினங்கள் கழித்து அவருடைய இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. தன்னுடைய குடும்பத்துக்காக அதிக நேரத்தை செலவிட விரும்புவதாக ஃபேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ரோஸ்பெர்க் இவ்வாறு தெரிவித்துள்ளார்.கடந்த ஞாயிறன்று, அபுதாபியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், மெர்ஸிடீஸ் அணியின் லூயிஸ் ஹாமில்டன்னை வீழ்த்தி நிகோ ரோஸ்பெர்க் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

_92810708_gettyimages-516619334

Related posts: