குஜராத் அணி அபார வெற்றி!

Thursday, April 28th, 2016

ஐ.பி.எல். தொடரின் 23-வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் குஜராத் லயன்ஸ் அணி மோதுகின்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனையடுத்து குஜராத் அணியின் துவக்க வீரர்களாக பிரண்டன் மெக்கலம் மற்றும் டுவைன் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர்.

ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த டெல்லி அணியின் பந்துவீச்சு நாலாபுறமும் சிதறியது.

10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 110 ஓட்டங்களை குவித்தது குஜராத் அணி. முதல் விக்கெட்டுக்கு112 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஸ்மித்(53), மெக்கலம்(60) ஆட்டமிழந்தனர்.

அணித்தலைவர் ரெய்னா(2), தினேஷ் கார்த்திக் (19), ஜடேஜா(4) வரிசையாக சொதப்பிய நிலையில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 172 ஓட்டங்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் டுமினி 48 ஓட்டங்கள் எடுத்தார். ஸ்மித் ஓவரில்ஹாட்ரிக் சிக்சர் அடித்த மோரிஸ், 17 பந்தில் அரைசதம் அடித்தார், கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், பிராவோ வீசிய முதல் பந்தில் பவுண்டரி உட்பட 5 ஓட்டங்கள் எடுத்தார் மோரிஸ்.

அடுத்த 3 பந்தில்5 ஓட்டங்கள் கிடைத்தது, கடைசி பந்தில் 4 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், 2 ஓட்டங்கள் மட்டும் எடுத்த டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 175 ஓட்டங்கள் எடுத்து தோற்றது.

குஜராத் அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.

Related posts: