குசால் மெண்டிஸ் நீக்கம் : மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை!

Monday, April 3rd, 2017

இலங்கை மற்றும் பங்களாதேஷ்  அணிகளுக்கள் மோதும் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான இலங்கை குழாமிலிருந்து குசால் மெண்டிஸ் நீக்கப்பட்டுள்ளார்.

குசால் மெண்டிஸ் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவருகின்றார். எனினும் இவரது இருபதுக்கு-20 சராசரி 9.23 என்ற குறைவான மட்டத்தில் உள்ளது.

இதனால் இவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் குழாமில் இடம்பிடிப்பதுடன், இருபதுக்கு-20 போட்டிகள் குழாமில் சிறிது காலங்களுக்கு விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை திசர பெரேரா, குசல் பெரேரா, டில்ஷான் முனவீர, தனுஷ்க குணதிலக, சந்துன் வீரகொடி மற்றும் செஹான் ஜயசூரிய அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள குசல் பெரேரா உடற்தகுதி பரிசோதனையில் பின்னர் அணியில் இடம்பிடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உபுல் தரங்க (அணித் தலைவர்) , டில்ஷான் முனவீர , தனுஷ்க குணதிலக , குசல் பெரேரா , லசித் மலிங்க , இசுறு உதான , நுவான் குலசேகர , தசுன் சானக , விகும் சஞ்சய , மிலிந்த சிறிவர்தன , அசேல குணரத்ன , சீகுகே பிரசன்ன , சாமர கபுகெதர , திசர பெரேரா , லக்ஷான் சந்தகன் , செஹான் ஜயசூரிய

Related posts: