குசல் மெண்டிஸிற்கு ஒழுக்காற்று நடவடிக்கை!

Monday, July 27th, 2020

வாகன விபத்தை ஏற்படுத்தி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் குற்றசம்சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் குசல் மெண்டிஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தினால் இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த யோசனை இடம்பெறவுள்ள இலங்கை கிரிக்கட் குழுவில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடன்படிக்கையில் உள்ள கிரிக்கட் வீரர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கு இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு உரிமை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குசல் மெண்டிஸின் சிற்றூர்தியில் மோதி உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்குவதற்கு அவர் அண்மையில் இணக்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: