குசல் தனுஸ்க டிக்வெலவிற்கு ஒரு வருடத்திற்கு தடை !
Saturday, July 31st, 2021இலங்கை அணியின் வீரர்கள் தனுஸ்ககுணதிலக குசல்மென்டிஸ் நிரோசன் திக்வெல ஆகியோர் அனைத்துவகையான போட்டிகளிலும் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அறிவித்துள்ளது.
அனைத்துவகையான சர்வதேச போட்டிகளிலும் மூவரும் விளையாடுவதற்கு ஒருவருடம் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளுர் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆறுமாதங்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசசபை நியமித்த சுயாதீன நிபுணர்கள் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.
இன்று இது குறித்து ஆராய்ந்த இலங்கை கிரிக்கெட்கட்டுப்பாட்டுச்சபையின் நிறைவேறறு குழு மூன்றுவீரர்களிற்கும் ஏற்படக்கூடிய பாதிப்பு அணிக்கான அவர்களின் பங்களிப்புஆகியவற்றை ஆராய்ந்த பின்னர் தண்டனைகள்; குறித்து ஆராய்ந்ததாக தெரிவித்துள்ளது.
தடைகளிற்கு அப்பால் ஒவ்வொரு வீரருக்கும் தலான பத்துமில்லியன் அபராதம் விதிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
00
Related posts:
|
|