குசலுக்கு மீண்டும் வாய்ப்பு!
Thursday, May 12th, 2016தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்திய குற்றச்சாட்டில் தடை விதிக்ககப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் ஜனித் பெரேராவிற்கு மீண்டும் போட்டிகளில் விளையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குசல் ஜனித் பெரேரா மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் அறிக்கை ஒன்றினூடாக குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய குசல் ஜனித் பெரேரா பயிற்சிகளில் ஈடுபடவும், சர்வசே போட்டிகளில் பங்கேற்கவும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரஃபேல் நடால் தகுதி!
மீண்டும் தேசிய அணியில் மெஸ்ஸி!
வெளியேறியது பெங்களூர் அணி: தகுதிச் சுற்றுக்குள் நுழைந்தது ஹைதராபாத்!
|
|