குசலுக்கான செலவை ஐ.சி.சி.செலுத்தாது?
Thursday, May 19th, 2016குசல் ஜனித் பெரேராவை ஊக்கமருந்து குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் செலவிடப்பட்ட தொகையை ஐ.சி.சி. செலுத்தாது என்று அறிவித்துள்ளது.
இலங்கைக் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், விக்கெட் காப்பாளருமான குசல் ஜனித் பெரேரா ஊக்கமருந்து உட்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதம் அவருக்கு ஐ.சி.சி. இடைக்காலத் தடையை விதித்தது.
இந்தத் தடையை எதிர்த்து நடந்த சட்டமூல நடவடிக்கையில் ஊக்கமருந்து உட்கொண்டார் என்ற அறிக்கை தவறானது என்றும், இதனால் குசல் மீது விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்கிவிடுவதாகவும் ஐ.சி.சி. அறிவித்தது
இதை நிரூபிக்க இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் சுமார் 15 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது. இதை ஐ.சி.சி.யிடம் கோரவுள்ளதாகவும் தெரிவித்தது.
இந்நிலையிலேயே ஊக்கமருந்து குற்றச்சாட்டிலிருந்து குசலை விடுவிக்க இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் செய்த செலவுகளை மீண்டும் செலுத்த உடன்பாடு இல்லை என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
அதாவது ஊக்கமருந்து பாவனை தொடர்பாக வாடா நிறுவனம் சான்றிதழ் அளித்தகட்டார் ஆய்வின் முடிவுகள் தொடர்பாக தமக்கு பொறுப்பு கூற முடியாது என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
Related posts:
|
|