குக் அதிரடியால் இலங்கைக்கு நெருக்கடி!

Thursday, December 29th, 2016

இலங்கை தென் ஆப்ரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 205 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இந்நிலையில், முதல் இன்னிங்சில் 286 ஓட்டங்கள் எடுத்த தென் ஆப்ரிக்கா அணி, 81 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை விளையாட தொடங்கியது. தென் ஆப்ரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய குக் 117 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான Elgar 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதிவரை நிதானமாக விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழந்து 351 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணியை விட 432 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தென் ஆப்ரிக்கா வீரர் F du Plessis 41 ஓட்டங்களுடனும், Q de Kock 42 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

12

Related posts: