கிளிநொச்சி மத்திய மகா வித்தி. 8 இலக்குகளால் அதிரடி வெற்றி!

Tuesday, June 26th, 2018

இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தால் நடத்தப்படும் 17 வயதுக்குட்பட்ட மூன்றாம் பிரிவு அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆட்டமொன்றில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணி 8 இலக்குகளால் வெற்றிபெற்றது.

அடம்பன் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணியை எதிர்த்து அடம்பன் மத்திய மகாவித்தியாலய அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அடம்பன் மத்திய மகாவித்தியாலய அணி 36 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் மதியழகன் 5 இலக்குகளையும் யுவேந்திரன், விதுசன் இருவரும் தலா 2 இலக்குகளையும் வீழ்த்தினர். 115 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்குக் களமிறங்கிய கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணி 22.3 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து வெற்றிபெற்றது. கனோயன் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களைப் பெற்றார்.

Related posts: